போட்டிப்பரீட்சையில் சித்தியடையாதவர்களுக்கு நேர்முப்பரீட்சையா? பட்டதாரிகளுக்கு மீண்டும் அநீதியா? 
கிழக்கு பட்டதாரிகள் போர்க்கொடி: அநீதி என தலைவர் யசீர் கண்டனம்!
-காரைதீவு  நிருபர் சகா-
 
 
கிழக்கு மாகாண சபை மீண்டும் பட்டதாரிகள் விடயத்தில் அநீதியான முறையில் நடந்து கொள்வது வன்மையாக கண்டிக்க வேண்டிய விடயம் .போட்டிப்பரீட்சையில் சித்தியடையாத 247பேரின் பெயர்விபரங்களை மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் இணையத்தில் வெளியிட்டிருக்கிறது.  இது அநீதி பாராபட்சம். இதற்கெதிராக நாம் போராட்டம் நடாத்த  திட்டுமிட்டுள்ளோம்..
இவ்வாறு அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றியத்தலைவர் யசீர் ஹமீட் ஆக்ரோசத்துடன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்:
கிழக்குமாகாணத்திலுள்ள  1441 நியமனத்தில் ஏலவே   1123 வெற்றிடங்களுக்கு தொழில் வழங்கப்பட்டன.  மீதமாகவுள்ள  வெற்றிடங்களுக்கு பரீட்சையில் பெற்றுக்கொண்ட புள்ளிகள்  அடிப்படையில் தேர்வு செய்வதாக நாம் ஆளுநரிடம் பேச்சுவார்த்தை நடாத்தியபோது எம்மிடம் உறுதியளித்தார். அதுமட்டுமல்ல கடந்தநேர்முகப்பரீட்க்குசைக்குத்தோற்றி ஓரிரண்டு புள்ளிகளால்  தவறிவிட்டவர்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம் வழங்குவதாக அந்தச்சந்தர்ப்பத்தில் கூறினார்.
ஆனால் இன்று அதற்கு முற்றிலும் மாறாக ஆளுனர்  பரீட்சையில் சித்தியடையாதவர்களை உள்ளடக்கி 2ம் கட்ட 247 வெற்றிடங்களுக்கான பெயர் பட்டியலை  வெளியிட்டுள்ளார்.
இலங்கை வரலாற்றில் இவ்வாறானதோர் வியப்பிலாழ்த்தும் ஆனால் படுமோசமான அநாகரீகமான தெரிவை கிழக்கு மாகாணசபை செய்து வரலாற்றுச்சாதனை  படைத்துள்ளது. போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் இருக்கத்தக்கதாக சித்தியடையாதவர்களை நேர்முகப்பரீட்சைக்கு அழைப்பது நீதியா? நல்லாட்சி அரசில் இதனை அனுமதிக்கலாமா?
 கிழக்கு மாகாண சபை இதுவரை இலங்கை வரலாற்றில் சித்தியடைந்தவர்கள் இருக்க பரீட்சையில் சித்தியடையாதவர்களுக்கு நேர்முக தேர்வுக்கான பட்டியல் வெளியிட்டுள்ளமை  கண்டிக்கத்தக்கதாகும்.
அப்பட்டியில்ல அம்பாறை மாவட்டத்தில் 116சிங்களபட்டதாரிகளினதும் 6தமிழ்மொழிமூல பட்டதாரிகளினதும் பெயர்கள் அதில் வெளியடப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் 46சிங்களமொழிமூலுபட்டதாரிகளினதும் 56தமிழ்மொழிமூல பட்டதாரிகளினதும் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் 20தமிழ்மொழிமூல பட்டதாரிகளினது பெயர்கள் வெளியடப்பட்டுள்ளன.
  பட்டதாரிகளை காலம் காலமாக இந்த கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழு  ஏமாற்றி வருவதனை பட்டதாரிகளான நாங்கள் எதிர்கின்றோம். எங்களுக்கான உரிமையை இந்த மாகாண சபை நிராகரிப்பதனை கண்டித்து பாரிய போராட்டம் ஒன்றினை செய்யவேண்டிய நிலைக்கு இந்த கிழக்கு மாகாண சபை எங்களை தூண்டியுள்ளது என்வே இந்த நியமனம் நிறுத்தப்பட்டு முறையான ஒழுங்கில் பட்டதாரிகள் உள்ளீர்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

By admin