தில்லையின் ‘விடாய்’ கவிதைநூல் வெளியீடு!

“மறுகா” இலக்கிய அமைப்பின் ஏற்பாட்டில் கவிஞர் தில்லையின் ‘விடாய்’ கவிதைநூல் வெளியீடு எதிர்வரும் 30.01.2022 ஞாயிறன்று காலை 9.55 க்கு மட்டக்களப்பு நூலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி.ரூபி வலன்ரினா பிரான்சிஸ் தலைமையில் இடம் பெறும் இந்நிகழ்வில் அதிதிகளாக பேராசிரியர் அம்மன்கிளி முருகதாஸ், டாக்டர்.புஷ்பலதா லோகநாதன் ,எழுத்தாளர் இந்திராணி புஸ்பராசா, சட்டத்தரணி மங்களேஸ்வரி சங்கர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.கவிஞர்கள் வாசுதேவன், த.உருத்திரா ஆகியோர் விமர்சன உரையாற்றவுள்ளனர்.

By admin