கல்முனை மாநகர் ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலய உற்சவத்தின் வேட்டைத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை !

கல்முனை மாநகர் ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. கடந்த 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் உற்சவம் ஆரம்பமாகியது.

எட்டாம் நாளான வேட்டைத்திருவிழா எதிர்வரும் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை. . வேட்டைத்திருவிழா பூசைக்கான உபயம் கல்முனை தமிழ் இளைஞர்கள் ஒன்றியம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

விநாயகப்பெருமான் முத்முத்துச் சப்றத்தில் கல்முனை மாநரில் வலம் வருதல் எதிர்வரும் 28 ஆம் திகதிஇடம்பெறுவதுடன், 12 ஆம் நாள் திருவிழாவான எதிர்வரும் முதலாம் திகதி வியாழக்கிழமை தீர்த்தோற்சவம் இடம்பெற்று கொடியிறக்கத்துடன் உற்சவம் இனிதே நிறைவு பெறும்.

 

 

 

By admin