அவுஸ்திரேலியா : சயனைற்றை பழரசத்தில் கலந்து கொடுத்து கணவனை கொலை செய்த மனைவி

சோபியா சாம் என்பவர் கள்ளக் காதலன் அருண் கமலாசனோடு சேர்ந்து அவரின் கணவரான சாம் ஆபிரஹாம் என்பவருக்கு தோடம் பழச் சாற்றில் சயனைடு நஞ்சைக் கலந்து படுகொலை செய்தார் என்று மெல்போர்ன் உச்ச நீதி மன்றத்தில் நடந்த விசாரணையில் நிரூபிக்கப் பட்டு சோபியா சாம் மற்றும் அவரின் கள்ளக் காதலன்அருண் கமலாசன் ஆகிய இருவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப் பட்டுள்ளது .

33 வயதான சோஃபியா சாம் மற்றும் அவரது காதலன் அருண் கமலாசன் ஆகிய இருவரும் சோஃபியா சாம்மின் கணவர் சாம் ஆபிரகாமைத் திட்டமிட்டுக் கொன்றனர் என்று 14 நாட்கள் நடந்த வழக்கில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை கடந்த வாரம் நிறைவுற்றது.

வழக்கில் கொடுக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், இருவரும் குற்றவாளிகள் என ஜூரிமார் குழு
நேற்று முடிவெடுத்துள்ளது.

இவர்களுக்கு என்ன தண்டனை என்பதை மார்ச் 21 அன்று நீதிபதி வழங்குவார் என்று வழக்கை விசாரித்த நீதிபதி அறிவித்தார்.

சோஃபியா மற்றும் அருண் இருவருக்கும் இடையில் . பல வருடங்களாக நட்பு இருந்ததை இருவரும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

2008ம் ஆண்டு அவுஸ்திரேலியா வந்த  அருண் கமலாசன் 2012ம் ஆண்டளவில் இந்தியாவில் இருந்த தனது மனைவியையும் குழந்தையையும் அவர்களது 6 வருட மகனையும் அழைத்து வந்து ஆண்டு அவுஸ்திரேலியா குடியேறினார்..

2015ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஒரு நாள் இரவு, சாம் ஆபிரகாம் அருந்தவென தோடம் பழரசம் ஒன்றைத் தயாரித்த சோஃபியா சாம், அதனுடன் சயனைட் எனும் நச்சுப் பொருளைக் கலந்துள்ளார். அதனை அருந்திய சாம் ஆபிரகாம் உடனேயே மரணமாகியுள்ளார்.

அவரச சேவைக்கு அழைப்பு விடுத்த சோஃபியா சாம், தனது கணவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறி விம்மி விம்மி அழுதுள்ளார்.

சாம் ஆபிரகாம் மரணத்தை காவல்துறை உடனேயே விசாரிக்கவில்லை. இறந்த தனது கணவனின் உடலுடன் இந்தியாவிற்குச் சென்ற சோஃபியா சாம், சில நாட்களிலேயே ஆஸ்திரேலியா திரும்பியுள்ளார்.

சாம் ஆபிரகாம் மரணித்து 10 மாதங்களின் பின்னர், ஆஸ்திரேலிய காவல்துறை ஒரு புலனாய்வு செயற்பாட்டை முடுக்கி விட்டிருந்தது. சோஃபியா, அருண் இருவரையும் கண்காணித்தது. இருவருடைய தொலைபேசி உரையாடல்களையும் ஒட்டுக் கேட்டது. அவர்களின் வாங்கிக் கணக்கு மற்றும் சாம் ஆபிரகாம் பெயரில் இருந்த வாகனம் அருண் கமலாசன் பெயருக்கு   மாற்றப்பட்ட்து மேலும் அவர்களுக்கிடையே இருந்த நெருங்கிய காதல் தொடர்பு என்பவற்றை எல்லாம் புலனாய்வுத்துறை உன்னிப்பாக ஆராய்ந்து கண்டு பிடித்தது. இந்த புலனாய்வுத்துறை அறிக்கையின்படி  கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சோஃபியா, அருண் இருவரையும்  காவல்துறையினர் கைது செய்தனர்

காவல் துறை விசாரணையின் போது சோஃபியாவிற்கும் கொலைக்கும் சம்பந்தம் இல்லை தான்தான் அந்த கொலையைச் செய்ததாக அருண் கமலாசன் சொன்னதை காவல் துறை ஒப்புக் கொள்ளவில்லை