பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை வரவேற்கும் சீனா…….

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை வரவேற்கும் சாங்ஜியாகோவ்

தென் கொரியாவின் பியொங்சாங்கில் நடைபெற்று வரும் 23ஆவது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பிப்ரவரி 25ஆம் நாள் நிறைவடைய உள்ளது. அதோடு சீனாவின் பெய்ஜிங்கிற்குரிய குளிர்கால ஒலிம்பிக் காலம் துவங்க உள்ளது. 2022ஆம் ஆண்டு பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது, சாங்ஜியாகோவிலுள்ள விளையாட்டு திடலான இரகசிய பூங்கா காட்சித்தளத்திலுள்ள பனிச்சறுக்கல் வயல் 4 ஆண்டுகளுக்குப் பிந்தைய சோதனையை வரவேற்கும் வகையில் தனது கட்டுமானத்தை விரைவுபடுத்தி வருகிறது. சீனாவில் ஒலிம்பிக் தொடர்பான மரபுச் செல்வமாக மாறுவதும் அதன் நோக்கமாகும்.

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை வரவேற்கும் சாங்ஜியாகோவ்

ஹேபெய் மாநிலத்தின் சாங்ஜியாகோவ் நகரில் அமைந்துள்ள இந்த பனிச்சறுக்கல் வயலில், ஹால்ஃப் பைப் எனப்படும் U வடிவிலான பனிச்சறுக்கல் திடலில் நடத்தப்படும் போட்டியைத் தவிர, சுதந்திர பனிச்சறுக்கல், சரிவு பனிச்சறுக்கல் போன்ற போட்டிகளும் நடைபெறும். இந்தக் காட்சித்தளத்தின் துணைத் தலைமை இயக்குநர் ஷுவென் கூறுகையில்,

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறுவதற்கு சுமார் 4 ஆண்டுகள் உள்ளன. 2016ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுத் திடலின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தைத் தொடங்கினோம். ஒலிம்பிக் போட்டிக்கு உகந்த ஹால்ஃப் பைப் விளையாட்டுத் திடல் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. இதர திடல்களின் கட்டுமானமும் இவ்வாண்டுக்குள் துவங்க உள்ளது என்று அறிமுகப்படுத்தினார்.

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தப் பணி தொடங்கிய பிறகு, பனி விளையாட்டில் பங்கேற்க 30 கோடி மக்களுக்கு ஊக்கமளிப்பது என்ற முழக்கத்தை சீனா முன்வைத்துள்ளது. 2016-2025ஆம் ஆண்டிற்கான பனி விளையாட்டு வளர்ச்சி திட்டம், 2016-2022ஆம் ஆண்டிற்கான நாட்டின் பனி வயல் கட்டுமானத் திட்டம் ஆகியவற்றை, சீன விளையாட்டு தலைமை பணியகம் மற்றும் சீன ஒலிம்பிக் அமைப்புக் குழு அடுத்தடுத்து வெளியிட்டுள்ளன. பனி விளையாட்டில் சீன மக்கள் பங்கேற்கும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, சீனாவின் குளிர்கால விளையாட்டு வளர்ச்சியை முன்னேற்றும் வாய்ப்பாக மாற இருக்கும்.

குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்குப் பின், இந்த பனி வயலிலுள்ள பெரும்பாலான விளையாட்டுத் திடல்கள் பொது மக்களுக்குத் திறந்து வைக்கப்படும். சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி தொடர்பான மரபுச் செல்வமாக அவற்றை மாற்ற விரும்புகின்றோம் என்று இப்பனி வயலின் தலைமை அலுவல் அதிகாரி பேன்னொ நகேர் தெரிவித்தார். மேலும், குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்குப் பின், இந்த பனி வயல் சீராக இயங்க வேண்டும். அப்போதுதான், பொது மக்கள் இங்கே மகிழ்ச்சியுடன் விளையாட முடியும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.