“சினம் ” தன்ஷிகா நடித்து ஆனந்த மூர்த்தி இயக்கியுள்ள  குறும்படம் கல்கத்தா திரைப்பட விழாவில் 8 பிரிவுகளில் விருது……

சினம் என்ற குறும்படம் கல்கத்தா திரைப்பட விழாவில் 8 பிரிவுகளில் விருது பெற்றுள்ளது. ஆனந்த மூர்த்தி இயக்கியுள்ள சினம் குறும்படம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். கலாச்சார ரீதியில் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக இப்படத்தை சினிமா விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர். தமிழ்நாட்டில் இருந்து மேற்குவங்கத்துக்கு பிழைக்க சென்று அங்கு பாலியல் தொழிலாளியாக மாறிய ஒரு பெண்ணின் கதை.

இதில் பாலியல் தொழிலாளியாக தன்ஷிகா நடித்துள்ளார். நேஷன் கிரியேஷன் சார்பில் நேசன் திருநேசன் தயாரித்துள்ளார். இந்நிலையில் கொல்கத்தாவில் நடைபெற்று வரும் கலாச்சார திரைப்பட விழாவில் 100-க்கும் மேற்பட்ட படங்கள் இடம்பெற்றன. இதில் சினம் படம் 8 விருதுகளை வென்றுள்ளது. சிறந்த நடிகையாக தன்ஷிகா, துணை நடிகையாக சினம் படத்தில் நடித்த பத்திதா, உள்ளிட்ட 8 விருதுகளை பெற்றுள்ளது