இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களில் 52% இற்கும் அதிகமானவர்கள் நீரிழிவு நோயாளிகள் என இலங்கை நீரிழிவு சம்மேளனத்தின் தலைவரும், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் உட்சுரப்பியல் நிபுணருமான வைத்தியர் மணில்க சுமணதிலக்க தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற கோவிட் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

நீரிழிவு நோய் மற்றும் பிற தொற்றாத நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் எந்த நோயும் இல்லாதவர்களை விட, இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இது அநேகமாக முன்கணிப்பை விட பத்து மடங்கு அதிகமாகும் எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.