அமைச்சர் சுவாமிநாதனுடன் கோடீஸ்வரன் பேச்சுவார்த்தை!
 
இந்துமத கலாசார விவகார புனர்வாழ்வுமறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுடன் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமனற் உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் நேற்று(21) புதன்கிழமை பேச்சுவார்த்தை நடாத்தினார்.
அவருடன் ஆலையடிவேம்பு இந்துமாமன்ற தலைவர் வே.சந்திரசேகரம் பிரதமகணக்காளர் எஸ்.கனகரெத்தினம் செயலாளர் ஆ.அமிர்தானந்தன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.அம்பாறை மாவட்ட தமிழ்ப்பிரதேசங்களில் இந்துமத விவகார அலுவல்கள் நீர்ப்பாசனக்குளங்கள் வீடமைப்பு புனர்வாழ்வுமறுசீரமைப்பு உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
 
– காரைதீவு  நிருபர் சகா-

By admin