காலஞ்சென்ற இந்து மாமன்றத் தலைவரின் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது – ஜனாதிபதி உட்பட முக்கிய பிரமுகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்!

அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவரும் சட்டத்தரணியுமான மறைந்த கந்தையா நீலகண்டனின் பூதவுடல் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு நேற்று (21) கொழும்பு பொரளை கனத்த இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இறுதி அஞ்சலி நிகழ்வில்  மக்கள் அரசியல் பிரமுகர்கள் சமயத் தலைவர்கள் என திரளானோர் பங்குபற்றியிருந்தனர்.

அன்னாருக்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, எதிர்க்கட்சி தலைவர் சம்மந்தர் மற்றும் அமைச்சர்கள் பலரும் முக்கிய அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

கடந்த 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 70 ஆவது வயதில் காலமான  நீலகண்டன் அவர்கள் சமயத்திற்கும் தமிழுக்கும் அரும்பணிகள் செய்து வந்த சமூக சமயப் பணியாளர் ஆவர். இந்து சமயத்தின் பாதுகாவலனாக விளங்கிய அன்னாரின் இழப்பு பேரிழப்பாகும்

By admin