கிரிக்கெட் : இலங்கையின் சுதந்திர கிண்ண முதலாவது போட்டியில் இலங்கை மற்றும் இந்தியா அணிகள் மோதவுள்ளன………

இலங்கை நாட்டின் நடைபெற்று முடிந்த 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, முத்தொடர் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்று இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவுசெய்துள்ளது. இதனடிப்படையில் இவ் முத்தொடர் போட்டியில் இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஸ் அணிகள் மார்ச் 6 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை மோதவுள்ளன.

இந்நிலையில் நடைபெறும் போட்டிகளில் அணிகள் பெறும் வெற்றிகளின் புள்ளிகளின் அடிப்படையில் இறுதி போட்டி தீர்மானிக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த வகையில் மார்ச் 6 ஆம் திகதி ஆரம்பமாகும் முதலாவது போட்டியில் இலங்கை மற்றும் இந்தியா அணிகள் மோதவுள்ளன.