பொதுமக்கள் அரசாங்கத்துக்கு கன்னத்தில் அறைந்து பாடம் புகட்டியுள்ளதாக நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கி்ழமை காலை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வௌியிடும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர், இன்றைய அமைச்சரவை வழமைபோன்றே நடைபெற்றது. அனைவரும் இணக்கத்துடன் செயற்பாடுகளை முன்னெடுத்தார்கள்.

பொதுமக்களும் ஊடகங்களும் எண்ணிக் கொண்டிருப்பது போன்று அரசாங்கத்தினுள் பாரிய பிரச்சினைகள் இல்லை. நாங்கள் நல்லிணக்கத்துடன் முன்நோக்கி செல்ல விரும்புகின்றோம்.

அதே நேரம் நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயலாற்றப் போவதில்லை. ஜனாதிபதி தலைமையில் எங்கள் பயணம் தொடரும்.

பொதுமக்களுக்கு நிவாரணங்கள் மற்றும் வறுமை ஒழிப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி பொதுமக்களின் ஆதரவை வென்றெடுக்க முயற்சி செய்வோம்.

கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் பொதுமக்கள் அரசாங்கத்தின் கன்னத்தில் அறைந்து பாடம் கற்பித்துள்ளார்கள். அதனை ஒரு பாடமாகக் கொண்டு எமது தவறுகளை திருத்திக் கொள்வோம் என்றும் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையாமல் ஜனாதிபதியோடு இணைந்து தலைமையில் இணைந்து எங்கள் பயணத்தை தொடருவோம் என்று அமைச்சர் கூறியிருப்பது ரணில் பிரதமர் தலைமையை அமைச்சர்களில் பலர் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை வெளிப்படுததுவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

tamilwin

By admin