தமிழுக்கும் சமயத்திற்கும் அரும்பணிகள் செய்த நீலகண்டன் ஐயாவின் இழப்பு தரும நெறிக்கு பேரிழப்பாகும்!

(தமிழ் இளைஞர் சேனை கல்முனை பிராந்தியத்தின் இரங்கல் செய்தி)

சைவமும் தமிழும் சிவபூமியில் நீண்டு வளர தர்ம நெறியில் நின்று உழைத்த பெருமகனார் மதிப்பிற்குரிய திரு கந்தையா நீலகண்டன் அவர்கள்  சிவகதி அடைந்துள்ளார்.அன்னாரின் இழப்பு தமிழ் சைவ மக்களுக்கு ஈடு செய்ய முடியாத மாபெரும் இழப்பாகும்.

45 வருடங்களுக்கு மேலான  சட்டத்துறையின்  அனுபவத்தின் மூலம் நூற்றுக்கு மேற்பட்ட சட்டத்தரணிகளை உருவாக்கி  இத் தரணியை விட்டு சிவகதி அடைந்து இன்றும் இப் பூவுலகில்  நீங்கா இடம் பெற்று நிலைத்து நிற்கும் திரு. கந்தையா நீலகண்டன் அவர்களின் இழப்பு எங்களுக்கும், கல்முனை பிராந்திய மக்களுக்கும் ஈடு செய்ய முடியாத ஒன்றாகும்.

அம்பாறை மாவட்ட மக்களின் நலனுக்காகவும் அரும்பாடுபட்ட மகான் எப்பொழுதும் சிறந்த தலைமைத்துவத்தின் ஊடாக நாடு பூராகவும் சமயப்பணியும் சமூகப்பணியும் சட்டபணியும் செவ்வனே புரிந்த உத்தமரின் இழப்பால் வருந்தும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனை சார்பாக தெரிவித்துக்ககொள்கின்றோம்.

 

By admin