சிங்கப்பூர் : சிங்கப்பூர் பட்ஜெட்; குடிமக்கள் அனைவருக்கும் சிறப்பு போனஸ் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது..

சிங்கப்பூர் பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அரசுக்கு சுமார் 7.6 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் கொண்ட உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உபரி பட்ஜெட் என்பது செலவுகளை விட வருவாய் அதிகம் கொண்டது.

இதனால் அந்நாட்டு குடிமக்கள் அனைவருக்கும் போனஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 21வயது நிரம்பிய அனைவரும் இந்த போனஸ் பெற தகுதியானவர்கள். இதற்காக 533 அமெரிக்க டாலர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.

மேலும், இதனால் 27 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.