.கோடம்பாக்கம் வலம்  : ” கோச்சடையான் ” படத்திற்கு :வாங்கிய கடனை 12 வாரங்களுக்குள் கடனை திருப்பி செலுத்த லதா ரஜினிகாந்த்க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு…..

ரஜினிகாந்த் நடித்து வெளியான ‘கோச்சடையான்’ திரைப்படத்திற்காக, லதா ரஜினிகாந்த், ‘ஆட் பீரோ’ நிறுவனத்திடம் இருந்து கடன் வாங்கியுள்ளார். இதில் மீதியுள்ள ஆறரை கோடி இந்திய ரூபாயை செலுத்தாமல் அவர் காலம் தாழ்த்தி வந்ததால், ஆட் பீரோ நிறுவனம் லதா ரஜினிகாந்த் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தநிலையில், ‘ஏன் ஆட் பீரோ நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய கடனை திருப்பி செலுத்துவதில் காலம் தாழ்த்துவது ஏன் என்றும், எப்போது கடனை திருப்பி செலுத்துவீர்கள்?’ என்றும் லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இந்தநிலையில் 12 வாரங்களுக்குள் ஆறரை கோடி இந்திய ரூபாயை திருப்பி செலுத்த உச்சநீதிமன்றம் லதா ரஜினிகாந்துக்கு கெடு விதித்துள்ளது.