கார்மேல் பற்றிமா தேசிய  பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டி நாளை!

கல்முனை கார்மேல் பற்றிமா தேசியபாடசாலையின் இல்ல விளையாட்டுப்போட்டி நிகழ்வு நாளை 21 ஆம் திகதி புதன்கிழமை பி.ப 2.00 மணிக்கு பாடசாலை விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெறவுள்ளது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்  துசித வனிகசிங்க அவர்களும், விசேட அதிதியாக பிராந்திய  பிரதி பொலிஸ் மா அதிபர் (DIG) நுவாண் வெதசிங்க  அவர்களும், கௌரவ அதிதிகளாக  கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் அப்துல் ஜலில் , கல்முனை பிரதேச செயலாளர் கே.லவநாதன், கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்தியட்சகர் இரா.முரளீஸ்வரன், கல்முனை தமிழ்  கோட்டக் கல்வி அதிகாரி ஆர் திரவியராஜா ஆகியோரும் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை பழைய மாணவர்கள் நலன்விரும்பிகள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

-சிந்துஜன்-

By admin