கல்முனை மாநகர் ஸ்ரீ தரவை சித்திவிநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம்!

கல்முனை மாநகர் ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலய வருடாந்த ஹோற்சவ பெருவிழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. உற்வசம் கடந்த 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. எதிர்வரும் 28 ஆம் திகதி விநாயகப்பெருமான் முத்முத்துச் சப்றத்தில்  கல்முனை மாநரில் வலம் வருதல்இடம்பெறுவதுடன்  12 ஆம் நாளாவது திருவிழாவான எதிர்வரும் முதலாம் திகதி வியாழக்கிழமை தீர்த்தோற்சவம் இடம்பெற்று கொடியிறக்கத்துடன் உற்சவம் இனிதே நிறைவு பெறும்.

திருவிழா காலங்களில் தினமும் மாலையும், காலையும் விசேட பூசை வழிபாடுகளும்  மாலை கூட்டுப்பிரார்த்தனையும்,  தெய்வீக சிறப்புரையும்  இடம்பெறுகிறது.

10 ஆம் நாளான எதிர்வரும் 28 ஆம் திகதி புதன்கிமை விநாயகப் பெருமான் முத்துச்சப்ற பவனி கல்முனை மாநகரில் கலாச்சார நடனங்கள் மேள வாத்தியங்கள் முழங்க யானைகளின் பவனியுடன் சிறப்பாக நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

   

 

 

 

By admin