கல்முனை மாநகர் தரவைசித்தி விநாயகர் ஆலய உற்வத்தின் நகர்வலத்தில் அனைவரும் கலாச்சார உடையுடன் ஒன்று திரள்வோம். இளைஞர் சேனை அழைப்பு

கல்முனை மாநகர் தரவை சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 10 ஆம் நாள் திருவிழாவான 28 ஆம் திகதி இடம்பெறும் முத்துச்சப்ற நகர் வவலத்தில் கலந்துகொள்ளும் அனைத்து இளைஞர் யுவதிகளும் எமது கலாசார உடையுடன் பெருந்திரளாக கலந்து கொள்ளுவோம் என கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனை அழைப்பு விடுக்கின்றனர்.

இளைஞர் சேனை மேலும் தெரிவிக்கின்றமை வருமாறு….

கல்முனை மாநகரத் தமிழர்களின் சிறப்பையும் கலாச்சாரத்தையும் பிரதிபலித்துக் கொண்டு பிரதான வீதியின் எல்லையில் அமர்ந்து அருள் பாலிக்கும் தரவை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் முத்துச் சப்பரப் பவனி கல்முனை மாநகரை வலம் வந்து அருள் பாலிக்கும் அரிய பக்திப் பரவச நிகழ்வு மேள தாள மங்கல இசையொலிக்க ,கலை கலாச்சார நிகழ்வுகளுடன், யானையின் ஊர்வலமும் எதிர்வரும் 28.02.2018 புதன்கிழமை பி.ப 03 மணிக்கு ஆரம்பமாகி கல்முனை மாநகரை வலம் வர உள்ள நிலையில்.. தமிழன் பெருமையை உலகறியச் செய்த கல்முனைப் பிராந்திய தமிழ் இளைஞர் சேனையின் பொங்கல் விழா போன்றதொரு மற்றுமொரு கலாச்சார நிகழ்வாக இந்த கலாச்சார நிகழ்வை மீண்டும் ஒருமுறை உலகிற்குக் காட்டுவோம் வாருங்கள் என கிழக்கு வாழ் தமிழ் பற்றாளர்கள், பக்தர்கள் அடியார்கள்கு,றிப்பாக இளைஞர்கள்யு,வதிகள் என அனைவரையும் எமது கலாச்சார ஆடையுடன் கட்டாயம் கலந்து கொள்ளுமாறு அன்பாக அழைக்கின்றனர் கல்முனைப் பிராந்திய தமிழ் இளைஞர் சேனையினர்.
நன்றி

By admin