அகில இலங்கை இந்து மாமன்ற தலைவர் திரு நீலகண்டன் நேற்று காலமானார்;இந்து குருமார் அமைப்பு இரங்கல்!

சமயத்திற்கும் தமிழுக்கும் அரும்பணிகள் செய்து வந்த அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவரும், பிரபல சட்டத்தரணியுமான திரு நீலகண்டன் நேற்று 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 72 ஆவது வயதில் கொழும்பில் காலமானார்.

இந்து சமயத்தின் பாதுகாவலனாக விளங்கிய அன்னாரின் இழப்பு பேரிழப்பாகும். இறுதி கிரியைகள் கொழும்பு பொறளை கனத்தை இந்து மயானத்தில் புதன்கிழமை (21) மாலை 4.00 மணிக்கு இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்து குருமார் அமைப்பின் இரங்கல் செய்தி!

அகில இலங்கை இந்து மாமன்ற தலைவரும் , இந்து வித்தியாபிவிருத்திச் சங்க தலைவரும் ,திருக்கேதீச்சர திருப்பணிச்சபைத்தலைவருமான திரு நீலகண்டன் இறை பதம் எய்தி விட்டார் என்னும் செய்தியறிந்து அதிர்ச்சியும் துக்கமும் அடைகின்றோம்.

இந்து மக்களிடையே புற சமயங்களின் ஆதிக்கத்தினால் இந்து நெறிக்கு குந்தகம் ஏற்படுத்துவதை தடுப்பதற்காக தனது சட்டத்துறையின் சீரான அறிவால் இந்து நெறி வாழ்வை மேம்படுத்துவதில் தன் வாழ்நாளின் பெரும் பகுதியை செலவிட்டுப் போராடிக் கொண்டிருந்த நீலகண்டனின் அமரத்துவம் நமக்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது.

அன்னாரின் பிரிவால் துயருறும் அவர்தம் குடும்பத்தினருக்கும்இஅவர் சார்ந்திருந்த துறை அலுவலர்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபத்தை இலங்கை இந்து குருமார் அமைப்பு தெரிவிக்கின்றது

By admin