கிரிக்கெற் : இவர்கள் இல்லையென்றால் இந்தியா தோல்வி அடைந்திருக்கும்; சச்சின்….

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் வெற்றி பெற குல்தீப் மற்றும் சாஹல் ஆகியோர்தான் காரணம் என சச்சின் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தொடர் முடிவடைந்துள்ள நிலையில் நாளை 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆரம்பமாகிறது.
டெஸ்ட் போட்டி தொடரை இழந்த இந்திய அணி ஒருநாள் போட்டி தொடரில் 5-1 என்ற புள்ளிக்கணக்கில் தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் மற்றும் சாஹல் ஆகியோர் ஒருநாள் போட்டி தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர்.
இந்நிலையில் இந்திய அணியின் வெற்றி குறித்து சச்சின் கூறியதாவது:-
இந்திய அணி எவ்வளவு ரன்கள் எடுத்தாலும் அது பெரிய விஷயமில்லை. அதை காப்பாற்றியது இந்திய சூழற்பந்து வீச்சாளர்கள்தான். மிடில் ஓவர்களில் சரியான நேரத்தில் சாஹல், குல்தீப் ஆகியோர் விக்கெட் வீழ்த்தியது இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது என்று கூறியுள்ளார்.