அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே அமைதியை ஏற்படுத்த அமெரிக்காவின் புதிய திட்டம்…..

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையேய அமைதியை நனவாக்குவதை அமெரிக்கா எப்போதும் கடைப்பிடித்து வருகிறது. மத்திய கிழக்கு அமைதிக்கான புதிய திட்டத்தை அமெரிக்கா தயார் செய்து வருகிறது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன்  தெரிவித்தார். இந்த திட்டத்தை அறிவிக்கும் தேதியை அரசுத் தலைவர் டிரம்ப்  உறுதி செய்வார் என்றும் அவர் கூறினார்.

ஜோர்டானில் பயணம் மேற்கொண்டு, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஆய்மன் சஃபத்தியைச் சந்தித்துப் பேசிய பிறகு டில்லர்சன் இவ்வாறு தெரிவித்தார்.

ஜெருசலேம் குறித்த இறுதி தகுநிலை, பாலஸ்தீன-இஸ்ரேல் அமைதிக்கான இறுதித் தீர்வு ஆகியவை பற்றி, பாலஸ்தீனமும் இஸ்ரேலும் கலந்தாய்வின் மூலம் தீர்வு காண வேண்டும். இரு தரப்பும் இரு நாடுகள் என்ற தீர்வு பற்றி உடன்பாட்டை உருவாக்கினால், அமெரிக்கா இந்த தீர்வைக் கருத்தில் கொள்ளும் என்று டில்லர்சன் குறிப்பிட்டார்.