உள்ளூராட்சி தேர்தலை அடுத்து கொழும்பு அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை தொடர்ந்தும் நீடித்துள்ளது. நிலைமையை சரிசெய்யும் நோக்கில் பலரும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பெற்றுக்கொண்ட அபார வெற்றி, வடக்கிலிருந்து தெற்கு வரை, நாளுக்கு நாள் என்ன நடக்கப்போகின்றது என்பது தொடர்பில் பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன.

“கேள்விக்குறியான பிரதமர் பதவி, புதிய பிரதமராக நிமல் சிறிபால டி சில்வா, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையில் தனி ஆட்சி, ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் தனி ஆட்சி, மகிந்த – மைத்திரி இணைவு? ரணில் – மைத்திரி பிரிவு? ரணில் – கூட்டமைப்பு இணைவு” போன்ற விடயங்கள் இதில் பிரதான இடத்தை பிடித்துள்ளன.

இவை அனைத்தும் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறான தீர்மானங்களை எடுக்கப்போகின்றது என்பது குறித்து தமிழ் மக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.

தெற்கில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தனித்து ஆட்சியமைத்தால் கூட்டமைப்பு ஆதரவு வழங்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதேசமயம், கூட்டமைப்புடன் மிகவும் நெருக்கமாக உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் நிலை தொடர்பிலும் இங்கு சிந்திக்க வேண்டியுள்ளது.

தமிழ்வின்

By admin