எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் தற்போதைய அமைச்சரவையில் மாற்றம் ஒன்றை மேற்கொள்ள உத்தேசித்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

நல்லாட்சி அரசின் பிரதமராக தான் பதவியில் நீடிக்கவுள்ளதாக அறிவித்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அடுத்து அமைச்சரவையில் முக்கியமான சில மாற்றங்களை மேற்கொள்ள உத்தேசித்துள்ளார்.

அதன் பிரகாரம் அமைச்சர்களான சரத் பொன்சேகா, ராஜித சேனாரத்ன, திலக் மாரப்பன போன்றோருக்கு முக்கியமான அமைச்சுப் பதவிகள் கிடைக்கும் வாய்ப்புகள் காணப்படுகின்றது.

அதே ​நேரம் புதியவர்கள் சிலர் அமைச்சரவைக்குள் உள்வாங்கப்படலாம் என்றும் தெரிய வருகின்றது.

இந்நிலையில் சுதந்திரக் கட்சியும் வேறுவழியின்றி அமைச்சரவையில் நீடித்திருக்க உத்தேசித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ்வின்

By admin