த.தே.கூட்டமைப்பு தமிழ் கட்சிகளோடு இணைந்து கிழக்கில் ஆட்சியமைப்பதே ஆரோக்கியமானது! –வேதநாயகம் அரவிந்தன்-

உள்ளூராட்சி தேர்தல் முடிவடைந்து ஆட்சியமைக்கும் படலம் பலசபைகளில் இழுபறி நிலையிலேயே காணப்படுவதைஅவதானிக்கமுடிகின்றது. புதிய முறையிலான தேர்தல் அமைப்பே இதற்குகாரணமாகின்றபோதும் இது எவ்வகையில் நன்மை அல்லது தீமைபயற்கின்றது என்பதை ஆராய்ந்து பார்ப்பது சற்றுக்கடினமாகவேஇருக்கின்றது. வழமையாக உள்ளூராட்சி சபைகளில் பிரதானவகிபாகத்தை பெறும் கட்சிகள் தங்கள் அறுதிப்பெரும்பான்மையை இழந்திருப்பது மட்டுமல்லாது ஆட்சியை பகிரும்போது ஒன்றுக்கு மேற்பட்டகட்சிகளையோ அல்லது சுயேட்சை குழுக்களையோ இணைத்துபயணிக்கவேண்டிய சங்கடமானநிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

இரண்டுபிரதான கட்சிகளை இணைத்து பயணிக்கின்ற நல்லாட்சி அரசாங்கமேஆதிக்கப்போட்டியில் ஆட்டம்கண்டுவரும்வேளை அடிமட்டஅரசியல்தளமான உள்ளூராட்சி சபைகளில் கட்சிகள் சமரசத்தையெட்டிஒரேதிசையில் எவ்வாறு பயணிக்கப்போகின்றன என்பதைபொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் குறிப்பாக கிழக்குமாகாண உள்ளூராட்சிசபைகளில் கூட்டாட்சி தொடர்பில் தமிழ் தலைமைகள் எடுக்கப்போகின்றமுடிவுகள் தொடர்பில் பல்வேறுபட்டகருத்துக்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏனைய தமிழ்கட்சிகளை இணைத்து ஆட்சியமைத்தது கொள்வதை தவிர்ப்பதில்முனைப்பு காட்டுவதை அவதானிக்கமுடிகின்றது. இதற்கு மாற்றீடாகஅவர்கள் முஸ்லிம் தரப்புக்களிடமிருந்தே ஆதரவைபெறவேண்டிய சூழல்காணப்படுகின்றது.

மேற்குறிப்பிட்ட சந்தர்பங்களில் எது பொருத்தமானதுஎன்ற வாதப் பிரதிவாதங்களும் இடம்பெற்றுவருகின்றன. இச்சந்தர்ப்பத்தில்எம் நினைவுக்கு வரவேண்டியது கிழக்கு மாகாண சபையில் இடம்பெற்றத.தே.கூ மற்றும் முஸ்லிம் காங்கிரசுக்கிடையேயான தமிழ் மக்களுக்குகசந்துபோன ஆட்சிப் பங்கீடுதான். இனி ஒருபோதும் தமிழ் மக்கள்அவ்வாறதொரு ஆட்சியமைவதை விரும்பப்போதில்லையென்பதுதிண்ணம்.

எதிர்வரும் ஆறு மாத காலத்துள் மாகாணசபை தேர்தலைஎதிர்கொள்ள வேண்டியுள்ளமையினால் இந்நிலையை உணர்ந்துசெயற்படவேண்டிய கட்டாயம் த.தே.கூட்டமைப்புக்கு கொஞ்சம்அதிகமாகவே காணப்படுகின்றது. தமிழர்களின் தாய்க்கட்சி என்கின்றஅடிப்படையில் அனைவரையும் அரவணைத்து பயணிக்கவேண்டியகட்டாயத்தையும் சந்தர்ப்பத்தையும் காலம் நமக்குஏற்படுத்திகொடுத்திருப்பதாகத்தான் இந்த உள்ளூராட்சி தேர்தலை நாம்கருதவேண்டும். தலைவர் பிரபாகரன் த.தே.கூட்டமைப்பைஉருவாக்குகையில் ஆயுதப் போராட்டத்தில் இருந்து விலகி அரசியலில்கலந்திருந்தோரை தமிழரசு கட்சியுடன் இணைத்தே அதனைபலம்பொருந்திய தமிழ் மக்களின் அரசியல் சக்தியாக உருவாக்கினார்.அதே விடயத்தில் இன்று சில விட்டுக்கொடிப்புக்களையும்நெகிழ்ச்சிகளையும் ஏற்படுத்தி அதனை பலப்படுத்திமுன்னகர்த்தவேண்டிய கடப்பாடு கூட்டமைப்பின் தலைவரையேசார்ந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளின் பின்னர் பல கட்சிகள்த.தே.கூட்டமைப்புன் சேர்ந்து பயணிக்க தங்களது விருப்பங்களைதெரிவித்திருக்கின்றன. அவர்கள் வெற்று கரத்துடன் தங்களுக்குஅடையாளம்தேடும் நோக்குடன் இக்கோரிக்கையை முன்வைக்கவில்லைஎன்பதையும் முற்றுமுழுதாக தமிழ் மக்களது ஆதரவைமட்டும்பெற்றுஅவர்கள் அளித்த வாக்கின்மூலம் வெற்றிபெற்ற உறுப்பினர்களுடனேயேஇவ்வேண்டுகோளை விடுத்துள்ளனர் என்பதை கூட்டமைப்பின் தலைவர்சீர்தூக்கிப்பார்ப்பது கிழக்குவாழ் தமிழர்களுக்கு இன்னும் பலம் சேர்பதாய்அமையும்.

எந்தவொரு தமிழ் கட்சிக்கோ அல்லது தமிழ் வேட்பாளருக்கோமாற்றினத்தார் வக்களித்ததல்லை என்கின்ற நிலையில் த.தே.கூட்டமைப்புதவிர்ந்த ஏனைய கட்சியில் வெற்றிபெற்ற ஒருவர் அக்கட்சிரீதியாகவோஅல்லது தனது சொந்த செல்வாக்கினாலோ மக்கள் மனதைவென்றவராகின்றார். அவ்வாறான கட்சிகளைஇ கட்சிகளின்உறுப்பினர்களை நிராகரித்து முஸ்லிம் கட்சிகளுடன் சேர்ந்து உள்ளூராட்சிசபைகளில் கூட்டாட்சியை நிறுவ த.தே.கூட்டமைப்பு முயற்சிக்குமாகஇருப்பின் அது ‘முஸ்லிம் ஆதரவு செயற்பாடுகளின்மூலம் தமிழ் மக்களதுஉணர்வை துஸ்பிரயோகம் செய்கின்றது’ என்ற கருத்தைவலுப்படுத்துவதாக அமையுமென்பதுடன் அது எதிர்காலத்தில் தமிழ் தேசியகூட்டமைப்புக்கு எதிராக பல சவால்களையும் தோற்றுவிக்க வாய்ப்பாகவும்அமைந்துவிடுமென்றே கூறலாம்.

-வேதநாயகம் அரவிந்தன்.

By admin