பிரதேச ஒருங்கிணைப்புக்குழு  கூட்டம் இன்று கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது!

பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் ( DCC) இன்று வெள்ளிக்கிழமை (16) கல்முனை தமிழ் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரும் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கோடிஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

பிரதேச செயலாளர் கந்தையா லவநாதனின் ஒருங்கிணைப்பின்கீழ் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு ., மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைப்பாளர் நவரெட்ணராஜா, பொலிஸ் அதிகாரி செல்வராஜா,புதிய மாநகர சபை உறுப்பினர் செல்வநாயகம், கல்முனை மாநகரசபை பொறியியலாளர் சர்வாணந்தா, மற்றும் திணைக்களத்தலைவர்கள் சமுகமட்ட அமைப்புகளின் தலைவர்கள் அதிபர்கள் என பலதரப்பட்டவர்கள் கலந்துகொண்டனர்

இக் கூட்டத்தில் கல்முனை பிரதேசத்தின் அபிவிருத்தி திட்டங்கள் இங்குள்ள குறைபாடுகள் தேவைகள் தொடர்பாக ஆராயப்பட்டு அவைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன. கல்முனை மாநகரசபையின் சேவைகள் தொடர்பாக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்ட போதும் கல்முனை மாநகசபையின் ஆணையாளர் இக் கூட்டத்திற்கு சமூகம் கொடுக்காததால் அதற்கான தீர்வுகள் தொடர்பாக முடிவுகள் எட்டப்படவில்லை.

பாடசாலைக்கு செல்லாமல் உள்ள மாணவர்கள் தொடர்பாகவும் இக் கூட்டத்தில் ஆராயப்பட்டு அவ்வாறான மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாகவும் இக் கூட்டத்தில் ஆராயப்படடன.

 

 

By admin