நடிகர் விவேக் காலமானார்!

திடீர் மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் நேற்று காலை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் காலமானார்.

இன்று அதிகாலை 4.30 மணிக்கு இறந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

என்ன நடந்தது?

திடீர் மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் நேற்று காலை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அதற்கு முன் தினம் தான் அவர் கொரோனாவுக்கான தடுப்பூசி போட்டுக் கொண்டிருந்தார்.

அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கொரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்கவே தனியார் மருத்துவமனையைத் தவிர்த்துவிட்டு அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். தடுப்பூசி போட்டுக்கொண்டால் கோவிட்-19 தொற்று ஏற்படலாம். ஆனால், அந்தத் தொற்று உயிரைக் கொல்லாமல் இருக்கத் தடுப்பூசி உதவும்” என்று தெரிவித்ததோடு, தடுப்பூசி போட்டதற்குப் பிறகு தனக்கு எந்தவித பக்கவிளைவும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்து இருந்தார்,

தடுப்பூசி போட்டுக் கொண்டதும் மாரடைப்பு வந்தது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது.

எக்மோ கருவி உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

தடுப்பூசிதான் காரணமா?

நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவமனை நிர்வாகம் தடுப்பூசிக்கும் விவேக்கின் மாரடைப்புக்கும் தொடர்பு இல்லை என விளக்கம் அளித்தது.

நன்றி -விகடன்

By admin