கல்முனையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்கு உழைத்த மக்களுக்கு நன்றிகள் – தமிழசுக் கட்சியின் கல்முனைத் தொகுதிக்கான உப தலைவர் க.கனகராஜா
இலங்கை தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களித்து கல்முனையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியடைய உழைத்த அனைத்து மக்களுக்கும் நன்றியினைத் தெரிவிப்பதோடு இத்தேர்தலில் காட்டிய ஒற்றுமையினை கல்முனை பிரதேச தமிழ் மக்கள் தொடர்ந்தும் கடைப்பிடிக்க வேண்டும்.
இவ்வாறு இலங்கை தமிழசுக் கட்சியின் கல்முனைத் தொகுதிக்கான உப தலைவர் க.கனகராஜா குறிப்பிட்டார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எமது கல்முனைப் பிரதேச தமிழ் மக்கள் பல்வேறுபட்ட அடக்கு முறைகளுக்கு ஆளாகி வருகின்றனர். இவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு தேவை என்பதை இத் தேர்தல் முடிவுகள் மூலம் கோடிட்டு காட்டியுள்ளனர். இதற்கான பதிலை எமது தமிழ் அரசியல் தலைமைகள் வழங்க வேண்டும். அத்துடன் எமது மக்களின் ஒற்றுமை தமிழ் உணர்வு என்பவற்றுக்கு தலை வணங்கி நன்றி தெரிவிக்கின்றேன் என்றார்.
(செல்லையா பேரின்பராசா – துறைநீலாவணை).

By admin