நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக தனியார்  மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி.

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள   தனியார் மருத்துவமனையில் அவசரசிகிச்சைப் பிரிவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.இன்று காலை சினிமா படபிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு திடீர் என மாரடைப்பு ஏற்பட்டது என்று கூறப்படுகிறது.

நேற்று அவர் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் COVID-19 க்கு தடுப்பூசி பெற்றுக்கொண்டார். தடுப்பூசியப் பெற்றுக் கொண்ட பின்பு பத்திரியாளர்களுடன் பேசிய விவேக் தடுப்பூசியை கட்டாய சமூக பாதுகாப்பாக எடுத்துக் கொள்ளுமாறு அனைவரையும் வலியுறுத்தினார் . அவர் மேலும் கூறுகையில் தடுப்பூசி குறித்து எவ்வித அச்சமும் தேவையில்லை. தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்பும் கொரோனா வரும். ஆனால் உயிரிழப்புகள் போன்ற பெரிய பாதிப்புகள் இருக்காது என்றும் கூறி இருந்தார்.

அவரது உடல்நிலை சற்று கவலைக்கிடமாக இருப்பதால் நடிகர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்ததாக வடபழனி தனியார் மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

பிரபல நகைச்சுவை நடிகரான விவேக் 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். திரைப் படங்களின் மூலம் நல்ல நல்ல சமூதாய சீர்திருத்தக் கருத்துகளைச் சொல்லி வந்தார் என்பதும் மறைந்த டாக்டர் அப்துல் கலாம் இவரின் ரசிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.