அவுஸ்திரேலியா : அமைச்சர்கள் தங்கள் அலுவலக ஊழியர்களுடன் பாலியல் தொடர்பு கொள்ள தடை…….

அவுஸ்திரேலியா துணைப் பிரதமர் பர்னபிஜொய்ஸ் (Barnaby Joyce ) ஏற்கனவே நடாலி( Natalie ) என்ற பெண்ணை1993ம் ஆண்டு  திருமணம் செய்து இவருக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ள நிலையில்  பர்னபி ஜொய்ஸ்க்கு அவரின் அலுவலகத்தில் ஊடகத் துறையில் பணி புரியும் விக்கி கேம்பியன் (Vikki Campion )என்ற இளம் பெண்ணுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு ஏற்டபட்ட்து . இந்த நிலையில் விக்கி கேம்பியன் கருவுற்றார் . இவருக்கு வரும் ஏப்ரல் மாதம் குழந்தை பிறக்க உள்ளது .இதனால் பர்னபிய ஜொய்ஸ்இன் மனைவிக்கும் இடையில் பிரச்சினை ஏற்டபட்ட்து .தனது மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வருவதாக பர்னபி ஜொய்ஸ் கடந்த டிசம்பரில் அறிவித்து இருந்தார் .கத்தோலிக்க கிறிஸ்தவரான இவர் ஓரினச் சேர்க்கைக்கு எதிராக தீவிர பிரச்சாரத்தை மேற்ட்கொண்டவர் என்பது குறிப்பிடாத்தக்கது .

பர்னபிஜொய்ஸ்  உடன்  விக்கி கேம்பியன் கோப்பு படம்

இந்த நிலையில் பெரும் நெருக்கடிக்குள்ளான அவுஸ்திரேலியா பிரதமர் மால்கம் டர்ன்புல்(Malcolm Turnbull) அவர் மீது ஓழுக்காற்றல் நடவடிக்கை எடுத்து அவரை பதவியிலிருந்து நீக்கினால் அரசின் பெரும்பான்மைக்கு பங்கம் ஏற்படும் நிலை அதிகம் இருந்தது . இதனால் அமைச்சர்களின் ஒழுக்க விடயத்தில் சில விதி முறைகளை பிரதமர் மால்கம் டர்ன்புல்  அதிரடியாக மாற்றங்களை கொண்டு வந்துள்ளார் . இது பற்றி அவர் விளக்கம் அளிக்கையில் : ” அமைச்சர்கள் தங்களுடன் பணியாற்றும் அலுவலக ஊழியர்களுடன் எந்த விதமான பாலியல் உறவு வைத்துக் கொள்வதை ஏற்க முடியாது. இந்த விதி முறை உடனடியாக அமுலுக்கு வரும் ” என்று தெரிவித்தார். இதையும் மீறி செயற்படுபவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்  என்று அவர் மேலும் தெரிவித்தார் .

விக்கி கேம்பியன் 

இந்த விதிமுறை அமுலுக்கு வரும் நிலையில் அவுஸ்திரேலியா பிரதமருக்கும் துணைப் பிரதமருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன