தனுஷ் நடித்த ‘கர்ணன்’ திரைப்படம்  திரையரங்குகளில்  இன்று வெளியாகியுள்ளது.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘கர்ணன்’ திரைப்படம் இன்று ரிலீசானது.  இந்நிலையில் தனுஷ் ரசிகர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர்.

இயகுநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் ‘கர்ணன். இத்திரைப்படத்தை எஸ் .தாணு தயாரித்துள்ளார்.

நேற்று தான் தமிழக அரசு திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என அறிவித்துள்ளது

இதனை அடுத்து இந்த கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்டு ‘கர்ணன்’ திரைப்படத்தை இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு ரிலீஸ் செய்துள்ளார்.

இந்த நிலையில் கோயம்பேடு ரோகிணி உள்ளிட்ட பல தியேட்டர்களில் இன்று அதிகாலையிலேயே இந்த படத்தை பார்க்க தனுஷ் ரசிகர்கள் குவிந்து உள்ளனர் என்பதும் கட்-அவுட் மற்றும் பட்டாசுகளை வெடித்து இந்த படத்தின் ரிலீஸை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் .

இந்நிலையில் இப்படத்தைப் பார்த்த நடிகர் விவேக் நடிகர் தனுஷைப் புகழ்ந்து பாராட்டிவாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.