மரண அறிவித்தல் – முருகேசு வடிவேல் -15 ஆம் கிராமம்

அம்பாறை மாவட்டம் நாவிதன் வெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 15ஆம் கிராமத்தை பிறப்பிடமாகவும், தொழில் நிமிர்த்தம் கட்டாரில் வசித்து வந்தவருமாகிய முருகேசு வடிவேல் அவர்கள் கடந்த 01/04/2021 வியாழக்கிழமையன்று மாரடைப்பால் காலமானா‌ர்.

அன்னார் காலஞ்சென்றவரான முருகேசு மற்றும் ஞானசெளந்தரி தம்பதியினரின் அன்பு மகனும் நளினியின் அன்புக் கணவரும் (ஆசிரியை நாவிதன்வெளி அன்னமலை வித்தியாலயம்) துஷா,நிஷா ஆகியோரின் அன்புத் தந்தையும் கேஷர்த்தனா, கவிநிஷா ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் எதிர் வரும் வெள்ளிக்கிழமை 09/04/2021 காலை 9:00 மணிக்கு கட்டார் நாட்டின் டுக்கானில் அமைந்துள்ள மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றீர்கள்.

குறிப்பு : கட்டார் நாட்டிலுள்ள உறவுகள் நண்பர்கள் சொந்தங்கள் இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்ளும் போது சுகாதார நடைமுறைகளை பேணி கலந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல் – கட்டார் வாழ் உறவுகள்

By admin