த.வி.கூட்டணிக்கு கல்முனையில் கிடைத்துள்ள இரண்டு மேலதிக ஆசனங்களையும் சுழட்சிமுறையில் வழங்கவுள்ளதாக தெரிவிப்பு!

நடந்து முடிந்த கல்முனை மாநகரசபைத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு கிடைத்துள்ள மேலதிக இரண்டு ஆசனங்களையும் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு சுழட்சிமுறையில் வழங்கப்படுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்த்தரும் முன்னாள் காரைதீவு பிரதேச சபைத் தவிசாளருமான செல்லையா இராசையா  தெரிவித்தார்.

சேனைக்குடியிருப்பு வட்டாரத்தில் ஒரு ஆசனத்தை வெற்றி பெற்றுள்ளதுடன் மேலதிக ஆசனங்கள் இரண்டு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். கல்முனை தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி 4749 வாக்குகளைப் பெற்றிருந்ன.

-சௌவியதாசன்-

By admin