சோழ மன்னன் பத்தாம் நூற்றாண்டில் கட்டிய பொலன்னறுவை புராதன  சிவன் கோவிலில் மஹா சிவராத்திரி. இந்துக்கள் மகிழ்ச்சி.!
காரைதீவு  நிருபர் சகா
 
வரலாற்றுசிறப்புபெற்ற அழிவடைந்த பொலன்னறுவை சிவன் ஆலயத்தில் பல தசாப்தகாலத்திற்குப்பிறக  சிவராத்திரி விசேட பூஜை நடைபெற்றுள்ளது.
இது இலங்கைவாழ் இந்துக்கள் மத்தியில் புத்துணர்ச்சியையும் உத்வேகத்தையும் தோற்றுவித்துள்ளது.
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் பூரண அனுசரணையுடன் சமன்பிட்டி வாழ் மக்களினால் பாலன் சுதாகரனின் தலைமையில் அனைத்து ஒழுங்குகளும் செய்யப்பட்டிருந்தது.
இலங்கையில் பொலன்னறுவ இரண்டாம் சிவன் ஆலயம் என போற்றப்படுகிற இராஜராஜ இராஜேந்திர குந்தவை பிராட்டி வானவன் மாதேவி திருப்பணி நிகழ்த்துவித்த புலத்தியர் நறுமலர் வனம்
சப்தரிஷிகளில் ஒருவரான புலஸ்திய மஹரிஷி அவர் மகன் விஸ்ரவஸ் ரிஷி அவர் மகன் இராவணன் பூஜித்து ஈசன் அருள் பெற்ற ஸ்தலம்  என இவ்வாறான பெருமை பொருந்திய வானவன் மாதேவி ஈஸ்வரத்தில் மஹா சிவராத்திரி தினமாகிய நேற்று  பகல் நேரத்தில் விஷேச பூஜைகள் இடம் பெற்றன.
தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற நிலையில் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் பூரண அனுசரணையுடன் சமன்பிட்டி வாழ் மக்களினால் பாலன் சுதாகரனின் தலைமையில் அனைத்து ஒழுங்குகளும் செய்யப்பட்டிருந்தது.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிவதொண்டரணி மாணவர்கள் உட்பட்ட அடியார்கள் வந்து கலந்து கொண்டிருந்தார்கள்.
பௌத்த சமய துறவிகளும் மாணவ சிறார்களும் கலந்து கொண்டார்கள். கலைநிகழ்வுகளும் இடம் பெற்றன. நாட்டில் உள்ள அனைத்து இந்து மக்களும் சென்று வழிபாடு செய்ய வேண்டிய அவசியம் உள்ள சிவஸ்தலம்.இதனால் தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இருந்து ஆலயத்தினை மீட்கக்கூடிய ஏதுநிலை விரைவில் தோன்றலாம்.
இந்துமாமன்றத்தின் இத்துணிச்சல்மிகு செயற்பாட்டை இந்துக்கள் வரவேற்றுள்ளனர். பழையவரலாறு இன்றைய சந்ததிக்கு எத்திவைக்கப்பட்டுள்ள  இச்செய்தி  பலரையும் ஈர்த்துள்ளது.
 

By admin