மேயருக்கு தவிசாளருக்கு மாதாந்த கொடுப்பனவு எவ்வளவு தெரியுமா?
-காரைதீவு நிருபர் சகா-

உள்ளுராட்சிசபைத் தோதல் நடைபெற்றுமுடிந்திருக்கிறது. போனஸ் ஆசனங்கள் வழங்கப்பட்டு ஆட்சி தீர்மானிக்கப்பட்டு தவிசாளர் மேயர் போன்ற   பதவிகள் வழங்கப்பட்டு பின்னர் தான் கொடுப்பனவு பற்றி கதைப்பார்கள். வெற்றிபெற்ற பலருக்கு இக்கொடுப்பனவு எவ்வளவு என்பது தெரியாதது ஒன்றும் வியப்பல்ல.

அதற்காக இதனைத்தருகின்றேன்.

உள்ளுராட்சி தேர்தலில் வெற்றிபெற்ற/ தேர்ந்தெடுக்கப்பட்ட 8325 உறுப்பினர்களுக்கு சம்பளம்/ படிகள் ( Allowances)மாதாந்தம் வழங்க 18 கோடி 28 இலட்சம் செலவாகும்.

மாநகர சபையாயின்( Municipal Council) மாநகர முதல்வருக்கு( Mayor ) மாதாந்தம் ரூபா 30,000 , மாநகர பிரதி முதல்வர் ரூபா 25,000 மற்றும் மாநகர சபை உறுப்பினருக்கு ரூபா 20,000 மாதாந்தக் கொடுப்பனவை பெற முடியும் (உபசரணைக் கொடுப்பனவு இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது).

நகர சபையாயின் (Urban Council) நகரசபை தவிசாளருக்கு ( Chairman) ரூபா 25,000 , துணைத் தவிசாளருக்கு ரூபா 20,000 மற்றும் சபை உறுப்பினருக்கு ரூபா 15,000 . பிரதேச சபையாயின் (Pradeshiya Sabha) தவிசாளருக்கு ( Chairman) ரூபா 25, 000, துணைத் தவிசாளருக்கு ரூபா 20,000 மற்றும் சபை உறுப்பினருக்கு ரூபா 15,000 படியாக மாதாந்தம் பெற முடியும்.

இக் கொடுப்பனவைப் பின்வரும் சந்தர்ப்பங்களில் உரிமை கோர முடியாது.

(1 ) கொடுப்பனவுக்குரிய மாதத்தில் மாதாந்த சபைக் கூட்டங்களில் / செயற்குழுக் கூட்டங்களில் எவற்றிலும் பங்கேற்காதிருத்தல்

(2) சம்பந்தப்பட்ட உறுப்பினர் குற்றச் செயலின் பேரில் தடுப்புக் காவலில் அல்லது சிறையில் இருத்தல்.

(3) குறித்த சபையின் நடவடிக்கைகளும் பணிகளும் சட்டத்தின் பிரகாரம் இடைநிறுத்தப்பட்டிருந்தல்.

By admin