மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர் பா.கோபாலபிள்ளை – பாண்டிருப்பு

01.04.2021

மூன்றாம் ஆண்டு நினைவுப் பூக்கள்
அமரர் பாலிப்போடி கோபாலபிள்ளை

ஆண்டுகள் மூன்று ஆகிவிட்டது அப்பா…
ஆறிடுமா அப்பா எம் துயரம்…
மறைந்திடுமா உன் இனிய முகம்.!
ஆறாத துயரை நாங்கள் அனுபவிக்க
நீங்கள் மீளாத்துயிர் கொண்டீர்கள்…

மறைந்த செய்தி கனவாகி போகிடவே
இன்றும் எம் மனமோ தவிக்கிறதே..
பூவுலகை விட்டு இடையினிலே பறிந்துவிட்டான்,
இறைவனுக்கும் இறக்கமில்லையே அப்பா…

இன்னொரு பிறப்பு இருப்பது உண்மையென்றால்,
அப்போதும் நீங்களே அப்பாவாக வரவேண்டும்…
உங்கள் பாதச்சுவடுகளிலே எம் பாதங்கள் பயணிக்கும்
நீர் காட்டிய வழிதனிலே எம் வாழ்வும் தொடர்ந்திருக்கும்…
ஓம் சாந்தி… சாந்தி… சாந்தி…

என்றும் உங்கள் நினைவுடன்
குடும்பத்தினர்

By admin