அம்பாறை மாவட்டத்தில் நிராகரிக்கப்பட்ட வாக்குகளில் அதிகளவானவை பட்டதாரிகளின் வாக்குகள்!
இந்த அரசியல் சரிவுக்கு பட்டதாரிகளின் அதிரடி நடவடிக்கையே காரணம் !
அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றியத்தலைவர் யசீர் தெரிவிப்பு!
காரைதீவு  நிருபர் சகா
 

வெளியான தேர்தல் முடிவுகள் இந்த நல்லாட்சி மக்களின் விருப்பத்தை பெறவில்லை .குறிப்பாக கல்வி கற்ற சமூகத்தின் விருப்பத்தைப் பெற வில்லை என்பது தான் உண்மை  என்பதனை வெளிகாட்டுகிறது. அதே நேரம்  இவ்வாறான தேர்தல் முடிவுகளை தான் நாங்கள் எதிர்பார்த்தோம். இதைத்தான் அன்று எங்கள் போராட்டத்தின் போது எதிர்வு கூறினோம்.

இவ்வாறு அம்பாறை மாவட்ட வெலையற்ற பட்டதாரிகள் ஒன்றியத்தலைவர் யசீர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்:

கிழக்கைப் பொறுத்தவரை மக்களின் பிரச்சினைகளை சரியாக இனம் கண்டு தீர்க்க தவறியமை குறிப்பாக பட்டதாரிகளின் பிரச்சனை தொடர்பில் அக்கறை இன்றியும்  புறக்கணிப்புடன் நடந்து கொண்டனர் . இன்று ஏற்பட்டுள்ள இந்த அரசியல் சரிவுக்கு பட்டதாரிகளின் அதிரடி நடவடிக்கையே காரணம் நாங்கள் V.I.P என பதிவிடுவோம் .

எங்கள் சக்தியை நாங்கள் காட்டுவோம் என அனைத்து உயர் தரப்பினரிடமும் கூறியிருந்தோம் கவனத்தில் கொள்ளாத இந்த நல்லாட்சியே இப்போதாவது பட்டதாரிகளின் பலத்தை அறிந்திருப்பீர் .அம்பாறை மாவட்டத்தில் நிராகரிக்கப்பட்ட வாக்குகளில் அதிகளவான வாக்கு பட்டதாரகளின் வாக்குகள் (VIP) என அறிய முடிகிறது.

எங்கள் அனைத்துப் பட்டதாரிகளுக்கும் சரியான தீர்வு வழங்கப்படாவிட்டால் மீண்டும் ஒரு தோல்வியை சந்திக்க நேரிடும் .எதிர் வரும் மாகாண சபை தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபடவும் தயங்க மாட்டோம். எனவே  எங்களுக்கான தொழில் உறுதிப்படுத்தப்பட வேண்டும் .அதுவரைக்கும் எங்கள் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்பதனை கூறிக்கொள்ள விரும்புகிறோம்.

கிழக்கில் ஆதிக்கம் செலுத்தும் தலைமைகளே  இப்போதாவது பட்டதாரிகளின் விடயத்தில் கவனம் செலுத்துவீர்கள் என நம்புகிறோம்.

கிழக்குக்கான மத்திய அரசனால் அங்கிகாரம் வழங்கப்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள் 4927  அத்துடன் மத்திய அரசினால் விண்ணப்பம் கோரப்பட்ட ஏனய அரச துறைகளில் உள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர் (DO) வெற்றிடங்கள் என்பன முழுமையாக நிரப்பப்பட வேண்டும் அதுவரைக்கும் எமது போராட்டம் தொடரும்.

By admin