பாண்டிருப்பு சிவனாலயத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பாக நடைபெற்ற விசேட பூசையும், கலைநிகழ்வும்!

மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு பாண்டிருப்பு சிவன் ஆலயத்தில் நான்கு சாம விசேட பூசை வழிபாடுகளும், கலை நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றது.

சிவராத்திரி தினத்தன்று (13) காலை 7.30 மணி முதல் மாலை 6 மணிவரை ஆலயத்திலுள்ள விசேட சிவலிங்கத்திற்கு சமூத்திர நீர் எடுத்து பக்தர்களின் கரங்களால் அபிஷேகம் செய்யும் சிறப்பு வழிபாடு இடம்பெற்றிருந்தது இதில் பெருந்தரளான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

.அத்துடன் இரவு ஆலய முன்றலில் பாண்டிருப்பு அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும், விநாயகபுரம் சிவகாமி அருங்கலைக் கூடத்தினரின் குருஷேத்திரப் போர் நாட்டுக் கூத்தும் இடம்பெற்றன.

ஆலய பரிபாலனசபையினரின் ஏற்பாட்டில் பாண்டிருப்பு கிராமத்தில் உள்ள அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு மூன்று பிரிவுகளாக நடாத்தப்பட்ட சைவ சமயப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இந் நிகழ்வின் போது பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

ஆலய பிரதம குருக்கள், ஆலய தலைவர், செயலாளர், பொருளார், பாண்டிருப்பு திரௌபதையம்மன் ஆலய தலைவர், மற்றும் சரவணாஸ் நகைமாளிகை உரிமையாளர் லதன் ஆகியோர் மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தனர்

-ராயு-

 

By admin