த.வி.கூட்டணியின் வெற்றிகளுக்காக வாக்களித்த வடக்கு கிழக்கு மக்களுக்கு நன்றிகள்- செல்லையா இராசையா

தமிழர் விடுதலைக் கூட்டணியின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்த்தரும், முன்னாள் காரைதீவு பிரதேசசபைத் தவிசாளருமான செல்லையா இராசையா வடக்கு கிழக்கில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு வெற்றிகளை பெற்றுத்தந்த மக்களுக்கு நன்றியினை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்…..

தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களோ மாகாணசபை உறுப்பினர்களோ இல்லாமலேயே வடக்கு கிழக்கில் போட்டியிட்டு 84 உறுப்பினர்களை பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு வாக்களித்த மக்களுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சி சார்பாக நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன். இது எங்களது வெற்றிபடியே

அம்பாறை மாவட்டத்தில் ஆலையடிவேம்பில் ஆறு உறுப்பினர்களையும் திருக்கோவில் 2 உறுப்பினர்களையும் கல்முனையில் 3 உறுப்பினர்களையும் பெற்றுள்ளோம்.. இந்த வெற்றிக்கு வாக்களித்து எமது வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றிகள்.

எங்களது கட்சிக்கு கிடைத்துள்ள மேலதிக ஆசனங்களை வாக்களித்த மக்களின் கருத்துக்களுடன் ஆலோசித்து சிறப்பாக சேவை வழங்க்க கூடிய வகையில் பகிர்ந்தளிக்கப்படும், . வடக்கு கிழக்கில் தேசிய அரசியலில் தமிழர்களின் அபிலாசைகளுக்கு பங்கம் ஏற்பாடாத வகையில் ஆட்சியமைக்க ஆதரவுகளை வழங்குவது தொடர்பாகவும் பரிசீலிக்கப்படும் என்றார்.

சௌவியதாசன்

By admin