கல்முனை  12 ஆம் வட்டார தமிழ் பிரதிநிதித்துவத்தை காப்பாற்ற ஒற்றுமையாக வாக்களித்த மக்களுக்கு நன்றிகள் – கல்முனை தமிழ் இளைஞர்கள் ஒன்றியம்!

நடந்து முடிந்த கல்முனை மாநகரசபைத் தேர்தலில் இரட்டைத் தொகுதியான தமிழரின் பூர்வீக பிரதேசமான கல்முனை நகர் உட்பட்ட 12 ஆம் தேர்தல் வட்டாரத்தில் ஒற்றுமையாக 85 வீதத்திற்கும் அதிகமாக வாக்களித்து தமிழ் பிரதிநிதித்துவத்தை காப்பாற்றிய தமிழ் வாக்காளர்களுக்கு கல்முனை தமிழ் இளைஞர்கள் ஒன்றியம் நன்றியினை தெரிவித்து தங்கள் அமைப்பால் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்த அறிக்கையில் வாக்களித்த அனைவருக்கும், தங்கள் அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு ஒத்தழைப்பு வழங்கி 12 ஆம் வட்டார வெற்றிக்கு பாடுபட்ட மக்கள், இளைஞர்கள், யுவதிகள், விளையாட்டுக்கழகங்கள், ஆலய நிருவாகத்தினர் அனைவருக்கும் நன்றி கூறியுள்ளனர்.

கல்முனை தமிழ் இளைஞர்கள் ஒன்றியத்தின் அறிக்கை 

By admin