கல்முனை தமிழ்மக்களின் நியாயமான கோரிக்கையை எற்கும் எந்தக்கட்சியுடனும் இணைந்து ஆட்சியமைக்கத்தயார்!
கல்முனை மாநகரசபை வேட்பாளர் ஹென்றிமகேந்திரன் கூறுகிறார்!
-காரைதீவு  நிருபர் சகா-
 

கல்முனைவாழ் தமிழ்மக்களின் நியாயமான கோரிக்கைகளை அபிலாசைகளை ஏற்கும் எந்தக்கட்சியுடனும் இணைந்து ஆட்சியமைக்கத் தயாராகவுள்ளோம்.

இவ்வாறு கல்முனை மாநகரசபைத்தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு அமோகவெற்றியீட்டிய ரெலோ உபமுதல்வரும் 11ஆம் வட்டார வேட்பாளருமான ஹென்றி மகேந்திரன் தெரிவித்தார்.

கல்முனை மாநகரசபையில் த.தே.கூட்டமைப்பு 7ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.அவற்றுள் அதிகூடிய 800வாக்குகளைப்பெற்றவர் ஹென்றிமகேந்திரன். இவர் முன்னர் கல்மனை மாநகரசபையின் எதிர்க்கட்சித்தலைவராக இருந்தவர்.

இந்நிலையில் இம்முறை அங்குள்ள அறுதிப்பெரும்பான்மையற்ற நிலையில் கட்சிகள் ஒன்றுடனொன்று தங்கியிருக்கவேண்டிய நிலை உள்ளது.

கல்முனை மாநகரசபை  கட்சிகள் பெற்ற வாக்குகளும் ஆசனங்களும் முழுமையான விபரம் வருமாறு :

ஐக்கிய தேசியக் கட்சி – 17424 –12 ஆசனங்கள் இலங்கை தமிழரசு கட்சி 9003   7 ஆசனங்கள் தமிழர் விடுதலைக் கூட்டணி  – 4749– 3 ஆசனங்கள் சுயேட்சை குழு (சாய்ந்தமருது)   : 13239 –   9 ஆசனங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் –  7573 –  5 ஆசனங்கள் சுயேட்சை குழு 3 – 1572 – 1 ஆசனம்

தேசிய காங்கிரஸ் – 1522 –  1 சுயேட்சை குழு 2 – 1226 –1 ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி – 1130 –-1 நல்லாட்சிக்கான தேசிய முன்னணி – 623 –  பட்டியல்  ஆசனம் -01

 

அவர் மேலும் கூறுகையில்:

எவ்வாறாயினும் கல்முனைத் தமிழ்மக்களின் நலனுக்கு அல்லது அவர்களது அபிலாசகைளுக்கு பங்கமில்லாதவகையில்தான் எந்தக்கூட்டும் அமையும். தமிழ்மக்களின் அபிலாசைகளுக்கு எவ்விதத்திலும் எமது கூட்டு குறுக்கே நிற்காது. அப்படிப்பட்ட கூட்டும் தேவையில்லை.

எமது கோரிக்கைகளை ஏற்கும் எந்தகட்சியுடனும் இணைய நாம்தயார்.

எம்மைப்பொறுத்தவரை நாம் 7ஆசனங்களைப்பெற்றிருந்தபோதிலும்  12 ஆசனங்களை வெளிக்காட்ட நாம் தயார்நிலையிலுள்ளோம்.40 உறுப்பினர்களைக்கொண்ட கல்முனை மாகநரசபையில்  ஆட்சியமமைக்க குறைந்தது.21ஆசனங்கள் தேவை.

அதற்கு நாம் ஒத்துழைக்கத்தயராகவுள்ளோம்.

 

விசேட நன்றிகள்!

கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் த.தே.கூட்டமைப்பை வெற்றிபெறவைத்த எமது கல்முனை வாழ் தமிழ் இளைஞர்கள் மாதர்கள் தமிழ்மக்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள். வாழ்த்துக்கள்.

குறிப்பாக 11ஆம் வட்டாரத்தில் என்னைத்தோற்கடிக்க உள்ளேயும் வெளியேயும் உருவாக்கிய சதிகளை எதிர்த்து வெற்றிபெறச்செய்த எனதுயிர் தமிழ்மக்களுக்கு நன்றிகள்.

By admin