பாண்டிருப்பு சிவனாலயத்தில் இன்று மகா சிவராத்திரி விசேட பூசையும், கலைநிகழ்வும் நடைபெறும்!

மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு பாண்டிருப்பு சிவன் ஆலயத்தில் நான்கு சாம விசேட பூசை வழிபாடுகளும், கலை நிகழ்ச்சிகளும் இன்று நடைபெறவுள்ளது.

இன்று காலை 7.30 மணி முதல் மாலை 6 மணிவரை ஆலயத்திலுள்ள விசேட சிவலிங்கத்திற்கு சமூத்திர நீர் எடுத்து பக்தர்களின் கரங்களால் அபிஷேகம் செய்யும் சிறப்பு வழிபாடும் நடைபெறும். அத்துடன் இன்று இரவு ஆலய முன்றலில் பாண்டிருப்பு அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும், விநாயகபுரம் சிவகாமி அருங்கலைக் கூடத்தினரின் குருஷேத்திரப் போர் நாட்டுக் கூத்தும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

-ராயு-

By admin