நற்பிட்டிமுனை மக்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் இந்த வெற்றியின் பங்குதாரர் நற்பிட்டிமுனை மக்கள் அனைவருமே – தி.இராஜரெட்ணம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு  வாக்களித்து என்னை கல்முனை மாநகரசபை உறுப்பினராக தெரிவு செய்த அனைவருக்கும் எனது நன்றிகள் என நற்பிட்டிமுனையில் தெரிவு செய்யப்பட்ட தி.இராஜரெட்ணம் மக்களுக்கு தனது நன்றியினை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்

கல்முனை மாநகரசபைக்கு உறுப்பினராக  நான் தெரிவுசெய்யப்பட்டிருந்தாலும் எனது வெற்றியின் பங்களார்கள் நற்பிட்டிமுனை கிராம மக்கள் அனைவருமே. . எனது செயற்பாடுகள் எமது கிராம மக்கள் இளைஞர்கள் ஆலய நிருவாகசபையினர் கிராம நலன் விரும்பிகள் அனைவரது பங்குபற்றுதல்களுடனேயே எனது செயற்பாடுகள் அமையும் இந்த பதவி எனக்கானது இல்லை நற்பிட்டிமுனை மக்களுக்கானது.

மக்கள் சேவகனாக சிறந்த அரசியல் தலைவராக எங்கள் பிரதேச மக்களின் நன்மதிப்பை பெற்ற எங்கள் கிராமத்தை சேர்ந்த முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் முருகேசு இராஜேஸ்வரன் அவர்களது அர்ப்பணிப்பான சேவையும் ஒரு முக்கிய காரணமே தமிழத் தேசியக் கூட்டமைப்பு மூலம் நான் வெற்றியடைந்தது. அவருக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்வதோடு, எமது கிராமத்தின் முன்னாள் கல்முனை மாநகரசபை உறுப்பினர் மறைந்த அமிர்தலிங்கம் அவர்களையும் நினைவு கூறுகின்றேன் என்றார்.

By admin