பதவி விலகினார் சமிந்த வாஸ் !
ஊதியம் அதிகரிக்க மறுத்த Sri Lanka Cricket விலகிய வாஸ்.

இலங்கை கிரிக்கெட் அணிக்கான பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகிய சமிந்த வாஸ், அது தொடர்பாக தமது விளக்கத்தை வழங்கியுள்ளார்.

தாம் தாழ்மையான கோரிக்கை ஒன்றை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திடம் முன்வைத்ததாகவும் எனினும் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும் இதைத் தவிர வேறு எதையும் கூறமுடியாது என்றும் அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

“நீதி வெல்லும்” என்ற விடயத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் நிலையில் அணிக்கு வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டு இருந்தார்.

எனினும் இறுதி தருணத்தில் அவர் தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

கொடுப்பனவு சம்பந்தமாக எழுந்த பிரச்சினை காரணமாகவே சமிந்த வாஸ் விலகி இருப்பதாக சிறிலங்கா கிரிக்கட் நிறுவனம் தமது ஊடக அறிக்கையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

By admin