த.வி.கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றிகள்!

நடந்து முடிந்த தேர்தலில்  தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு வாக்களித் அனைத்து மக்களுக்கும் பாண்டிருப்பு 6 ஆம் ,10 ஆம் வட்டாரங்களில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களான காத்தமுத்து கணேஸ், செல்ப்பா மகேநதிரராஜா  அவர்களோடு   கிருஷ்ணபிள்ளை அருணன் ஆகியோர் கூட்டாக  நன்றியினை தெரிவித்தனர்

அவர்கள் மேலும் தேரிவிக்கையில்…..

மிகவும் நீண்ட இடைவெளிக்குப்பின்னர் உதயசூரியன் கல்முனையில் போட்டியிட்டாலும் மாற்றம் ஒன்றை விரும்பிய மக்கள் பாண்டிருப்பிலும், கல்முனை பிரதேசத்திலும் அதிகளவான வாக்குகளை வழங்கியுள்ளார்கள். சுமார் 5000 வாக்குகள் எமக்கு கிடைத்துள்ளமை எமக்கு மக்கள் வழங்கிய வெற்றியே.

இந்த வாக்குகள் மூலம் கல்முனை மாநகரசபைக்கு உதயசூரியன் சார்பாக மூன்று ஆசனங்களைப் பெறுவதற்கு வாய்ப்பளித்துள்ளார்கள். வெற்றி தோல்விகளுக்கப்பால் கல்முனை பிரதேச தமிழர்களின் எதிர்பார்ப்புக்கேற்ப எமது சேவை என்றும் தொடரும்.

இந்த தேர்தலில் வெற்றிபெற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் எமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம் என்றார்கள்.

By admin