உன் இருகை அணைப்பில் இருக்கும் போதும் என்னை உன் நெஞ்சில் அரவணைக்கும் போதும் எனக்கு ஆறுதல் கூறி உச்சிமுகரும் போதும்… நானும் உன் பிள்ளைதான் !

என் ஆசைகளை பூர்த்தி செய்யும் போதும் என் பசிக்கு உணவூட்டும் போதும் என் சோகம் துடைத்து இன்பம் தரும் போதும்… நானும் உன் பிள்ளைதான் !

என் தவறுகளை திருத்தி வழிநடத்தி என் காதை திருகி திட்டும் போதும் என் கண்ணீர் துடைத்து ஆறுதல் தரும் போதும்… நானும் உன் பிள்ளைதான் !

என் காலம் முழுக்க மனைவின் தாய்ப்பாசதோடு என் பிள்ளைகளோடு பிள்ளைகளாக்கி என்னை மூன்றொடு நாலாக வளர்கிறாயே… நானும் உன் பிள்ளைதான் !

-சண் சரேன்-

By admin