என்னை தெரிவு செய்த பெரியநீலாவணை மக்கள் அனைவருக்கும் நன்றிகள்- குபேரன்

தமிழத் தேசியக் கூட்டமைப்பு சார்பாக பெரியநீலாவணையில் தெரிவு செய்யப்பட்ட சோ.குபேரன் வாக்களித் பெரியநீலாவணை மக்களுக்கு தனது நன்றியினை தெரிவித்தார்..
அவர் மேலும் தெரிவிக்கையில்…

நடந்துமுடிந்த கல்முனை மாநகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து என்னை தெரிவுசெய்த பெரியநீலாவணை மக்களுக்கு எனது நன்றிகள். பெரியநீலாவணை மக்களின் தேவைகள் எதிர்பார்ப்புக்களை கவனமெடுத்து அர்ப்பணிப்போடு சேவை செய்ய வேண்டியது எனது பொறுப்பும் கடமையும்.

இந்த வெற்றிக்காக பாடுபட்ட பெரியநீலாவணை மக்கள் இளைஞர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் எல்லோரினதும் முயற்சிக்கும் உழைப்புக்கும் கிடைத்த இந்த வெற்றி எனக்கானது இல்லை பெரியநீலாவணை மக்கள் அனைவருக்குமானது என்றார்.

By admin