த.தே.கூட்டமைப்பின் வெற்றி மக்களின் வெற்றி வாக்களித்த அம்பாறை மாவட்ட மக்களுக்கு நன்றிகள் மு.இராஜேஸ்வரன்!

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன்  வாக்காளர்களுக்கு தனது நன்றியினை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்…

நடந்தமுடிந்த உள’ளுராட்சி மன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் அதிகமாக தமிழத் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்த அம்பாறை மாவட்ட தமிழ் உறவுகளுக்கு எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன்.

எங்களது மக்கள் தமிழ்த் தேசியத்தில் இன்றும் உறுதியாகவே இருக்கின்றார்கள் அதே போன்று எமது மக்களின் உணர்வுகளை உணர்ந்து சேவைசெய்ய வேண்டியது ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

கல்முனை தமிழரின் பூர்வீக நிலத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் காப்பாற்றபட வேண்டும் என்று உழைத்த அனைவருக்கும் குறிப்பாக அல்லும் பகலும்  தங்கள் நேரங்களை ஒதுக்கி பாடுபட்ட கல்முனை இளைஞர்கள் அனைவருக்கும் எனது நன்றியினையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.

By admin