காரைதீவு பிரதேசசபையில் கூட்டாட்சி?
காரைதீவு நிருபர் சகா
 
காரைதீவு பிரதேசசபைக்காக நடைபெற்ற 3வது உள்ளுராட்சிசபைத்தேர்தலில் எந்தவொரு கட்சியும் அறுதிப்பெரும்பான்மையை பெறாத காரணத்தினால் கூட்டாட்சி அமைக்கவேண்டியநிலை ஏற்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற தேர்தலில்  நேற்று நடைபெற்ற தேர்தலில் இலங்கைத்தமிழரசுக்கட்சி 3802 வாக்குகளையும் சுயேச்சை-1 அணி 1985வாக்குகளையும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 1684வாக்குகளையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1522வாக்குகளையும் சுயேச்சை -2 அணி 829வாக்குகளையும் தமிழர்விடுதலைக்கூட்டணி 280வாக்குகளையும் ஜ.தே.கட்சி 203வாக்குகளையும் பெற்றுக்கொண்டன.
அதன்படி  த.அ.கட்சி 4ஆசனங்களையும் சுயேச்சைக்குழு-1 அணி 2ஆசனங்களையும் ஸ்ரீல.மு.கா. 1ஆசங்ம ஸ்ரீல.சு.கட்சி 2ஆசனத்தையும் அ.இ.ம.காங்கிரஸ் 1ஆசனத்தையும் சுயேச்சை 2 அணி 1ஆசனத்தையும் பெற்றுக்கொண்டது.
சிலவேளை .  ஸ்ரீல.மு.கா கட்சிக்கு மேலுமொரு ஆசனம் கிடைக்குமா? என்பதை தேர்தல் ஆணையாளர் தீர்மானிப்பார் என அம்பாறை தேர்தல் அலுவலகம் கூறுகிறது.அப்படி 1ஆசனம் கூடினால் காரைதீவுப்பிரதேசசபைக்கான மொத்த ஆசனங்கள் 12ஆக மாறும்.
வட்டாரமுறையில் த.அ.கட்சி சார்பில் ச.நேசராசா த.மோகனதாஸ் சி.ஜெயராணி கி.ஜெயசிறில் அ.இ.ம.காங்கிரஸ் சார்பாக முஸ்தபா ஜலீல் ஸ்ரீல.சு.கட்சி சார்பில் ஏ.எம்.யாகீர் சுயேச்சை-2 அணி சார்பில் ஏ.ஆர்.எம். பஸ்மிர் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
விகிதாசாரமுறையில் தெரிவுசெய்யப்படுபவர்களின் பெயர்கள் அந்தந்த கட்சியினால் தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டபின்னரே வெளியாகும்.
11ஆசனங்களைக்கொண்ட காரைதீவுப்பிரதேசசபைக்காக 6கட்சிகளும் 2சுயேச்சைக்குழுக்களும் போட்டியிட்டன.
மொத்த 12972வாக்குகளில் 10821வாக்குகள் அளிக்கப்பட்டன. அதில் 106 வாக்குகள் நிராகரிக்கப்பட்டதனால் 10715வாக்குகள் செல்லுபடியானது.அதனால் வெட்டுப்புள்ளி 983.72 அதாவது 984 ஆகும்.

By admin