ரஷ்யா : ரஷ்ய சராடோவ் ஏர்லைன்ஸின் AN 148  விமான விபத்தில்  71 பேர் பலி…

மாஸ்கோவின் டோமோதெடோவோ சர்வதேச விமான நிலையத்திலிருந்து 65 பயணிகள் மற்றும் ஆறு ஊழியர்களை சுமந்து செல்லும் ஒரு ரஷ்ய பயணிகள் விமானம் கிளம்பிய ஒரு சில நிமிடங்களில் விபத்துக்குள்ளாக்கியது.
சாரோவோவ் ஏர்லைன்ஸ் 6W703 நிறுவனத்தால் இயக்கப்படும் AN 148 என்ற இந்த விமானம், கஜகஸ்தான் உடனான ரஷ்யாவின் எல்லைக்கு அருகில் உள்ள உரால் மலைப்பகுதியின் ஓர்ஸ்க் நகரத்திற்கு சென்றுகொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்தது. விமானம் ரேடார் திரைகளில் இருந்து மறைந்த பிறகு இந்த விபத்து நடந்துள்ளது..

ரஷ்ய அரசு செய்தி நிறுவனம் டாஸ் மொத்தம் 71 பேர் இறந்ததாக தெரிவித்தனர்.

மாஸ்கோவின் தென்கிழக்கில் 80கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அர்குனோவோ பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில், விமானம் எரிந்துக்கொண்டு கீழே விழுவதை மக்கள் பார்த்துள்ளனர்.

இந்த விமானம் ஒரு நிமிடத்திற்கு 3,300 அடிகள் கீழ் இறங்கியதாக விமானம் கண்காணிப்பு தளமான, ‘ப்ளைட்ரேடார்’ ட்வீட் செய்துள்ளது. பனி படர்ந்த நிலத்தில், விமானத்தின் பாகங்கள் கிடப்பதை இந்த தளத்தின் புகைப்படங்கள் காட்டுகின்றன. இதன் அருகில் உடல்களை கண்டெடுத்தாக அதிகாரிகள் கூறுகின்றனர் என டாஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.

விமானத்தில் 65 பயணிகள் மற்றும் 6 விமான குழுவினர் இருந்துள்ளனர். ரஷ்ய அதிபர் புதின் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மற்றும் விபத்துக்கு காரணத்தை கண்டுபிடிக்க விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்.

தற்போது விபத்தில் சிக்கியுள்ள விமானம் சரடோவ் ஏர்லைன்ஸிக்கு சொந்தமானது.

விமானத்தில் விமானிகள் இருக்கும் பகுதியில், விமானி அல்லாத ஒருவர் இருந்ததை திடீர் ஆய்வின் போது கண்டுபிடிக்கப்பட்டதால், சரடோவ் ஏர்லைன்ஸின் சர்வதேச விமான சேவைக்கு 2015-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது