கல்முனை வாழ் தமிழ்மக்களுக்கு நன்றிகள்!
சர்ச்சைக்குரிய 12ஆம் வட்டார பிரதிநிதி ராஜன்!
காரைதீவு  நிருபர் சகா
கல்முனை மாநகரசபையின் இரட்டை அங்கத்தவர் தொகுதியை தமிழர்கரங்களில் தக்கவைத்த கல்முனை வாழ் தமிழ் இளைஞர்கள் மாதர்கள் பொதுமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் என்று த.தே.கூட்டமைப்பில் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதி சந்திரசேகரம் ராஜன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்:
கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் 9003 வாக்குகளை அளித்து 7உறுப்பினர்களைத் தெரிவுசெய்துள்ள தமிழ்மக்களை நன்றியுடன் பார்க்கிறேன்.
குறிப்பாக இரட்டை அங்கத்தவர் தொகுதியை வென்றெடுக்கவேண்டும் என்ற திடசங்கற்பத்துடன் இரவுபகல் பாராமல் உழைத்த எனது ஆருயிர் கல்முனை தமிழ் இளைஞர்கள் மாதர்கள் பொதுமக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
எனது சேவை என்றும் மக்களுக்காக அமையும். என்றார்.

By admin