உலக பாரிசவாத தினத்தை முன்னிட்டு இன்று(30) கல்முனை ஆதார வைத்தியசாலையில் Dr இரா முரளீஸ்வரன் ( வைத்திய அத்தியட்சகர் ) அவர்களின் வழிநடத்தலில் வைத்திய நிபுணர் Dr N இதயகுமார் அவர்களினால் பாரிசவாதம் பற்றிய சிறப்பு விழிப்பூட்டல் கருத்தரங்கு வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகள் ,தாதிய உத்தியோகஸ்தர்கள் , துணைவைத்திய சேவையினர் , ஏனைய உத்தியோகஸ்தர்கள் மட்டத்தில் நடைபெற்றது.

கருத்தரங்கில் பாரிசவாதத்தை கண்டறியக்கூடிய இலகு வழிகளுடன் , சடுதியாக ஏற்படின் ஏற்பட்ட நேரத்திலிருந்து 5 மணித்தியாலத்தினுள் தாக்கத்தின் தன்மையை பொறுத்து இதற்கான விஷேடபிரிவாக இயங்கும் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு அனுப்பி பரிபூரணகுணமடையகூடிய வாய்ப்பினையும் விபரித்து , அவ்வாறான அவசர நேரத்தில் துரிதமாக செயற்படவேண்டிய அவசியத்தையும் ,அணுகு முறையும்  கூறப்பட்டது.வைத்தியசாலை இவ் வேளையில் எவ்வாறு செயற்படலாம் என அறிவுரை வழங்கப்பட்டது.

இச்செயற்பாட்டிற்கான மேலதிக விளக்கத்தை இவ் வைத்தியசாலையின் மற்றுமோர் வைத்தியநிபுணரான Dr R றமேஸ் தெளிவுபடுத்தினார்.

 மேலும் வைத்தியநிபுணர் Dr N இதயகுமார் வெளிநாட்டு கற்கைநெறியை நிறைவு செய்து இம்மாதம் கல்முனை ஆதாரவைத்தியசாலையில் கடமையேற்றுள்ளார் என்பதும் முக்கிய விடயம்.இவர் சம்மாந்துறை ஆதாரவைத்தியசாலையில் கடமையாற்றியவேளை அனேக மக்களின் நன்மதிப்பை பெற்றிருந்தார்.
பொதுநோக்கு கொண்ட இரண்டு வைத்திய நிபுணர்களின் (Dr R றமேஸ் ,Dr N இதயகுமார்) கூட்டுச் சேவை கல்முனை ஆதாரவைத்தியசாலையின் அளப்பெரிய சேவைக்கு ஓர் வரப்பிரசாதம் எனவும் , வைத்திய சேவையை பொறுத்தமட்டில்  பொது சேவைமூலம் மேலும் பல நன்மைகளை பொதுமக்கள் பெறலாம் எனவும் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மேலாக இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் வைத்திய அத்தியட்சகர் Dr இரா முரளீஸ்வரன் அவர்களின் நேர்த்தியான தலைமைத்துவத்தில் அண்மையில் இவ் வைத்தியசாலைக்கு மிகத் தேவையான இரத்த சுத்திகரிப்பு பிரிவும் , அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் திறந்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

By admin

Leave a Reply

Your email address will not be published.